ஒரு மரத்தின் வேதனை
வேரிலிருந்து துளிர்த்தேன்
விருட்சமாய் வளர்ந்தேன்
பாசம் கொண்டு நீ பாசனநீர் ஊற்றாவிட்டாலும்
எச்சத்தின் மிச்சத்தில் துச்சமாய் வளர்ந்தேன்...
நிழல் கொடுத்தேன்
காற்று கொடுத்தேன்
கனி கொடுத்தேன் ..
நீ மட்டும் ஏன் பிணி கொடுத்தாய் ?
இயற்கையின் சீற்றத்தில் சீர்குலையாமலும்
சர்க்காரு திட்டமிடலில் தொலையாமலும்
உசுர கையில புடிச்சு உசிரு வாழ்ந்து வந்த ..
பாவி மவ
காரு நிறுத்த இடமில்லன்னு
மாரு மேல கால வச்சு
கூறு கூறா போட்டுட்டேயே..
இது ஞாயமா?