குழந்தை

நீ பிறந்த நாள்
என் குடும்பத்தின் சுதந்திர நாள்
உன் பொக்கை வாய்ச்சிரிப்பில்
தேசத்தந்தையைப் பார்க்கிறேன்
உன் கண்களின் கருணையில்
அன்னைத் தெரஸாவைப் பார்க்கிறேன்
உன் முகத்தின் கோபத்தில்
நேதாஜியைப் பார்க்கிறேன்
உன் மென்மையான உள்ளத்தில்
நேருவைப் பார்க்கிறேன்
மொத்தத்தில் உன் உருவை
என் தேசமாய் பார்க்கிறேன்
மழலையே!

எழுதியவர் : ச.சேட்டு மதார்சா (29-Aug-18, 3:24 pm)
Tanglish : kuzhanthai
பார்வை : 126

மேலே