மழை

மழை
நீர் வீழ்ச்சிக்குப் போகமுடியாத
ஏழைக்கு...நீ தான்
நயாகரா நீர்வீழ்ச்சி! மழையே
அன்றாடம் காலிக்குடங்களுடன்
சண்டையிட்டு மண்டையுடைக்கும்
பெண்களுக்கு.. நீ தான்
சமாதானப் புறா.. மழையே
தவமாய் தவமிருந்து
உன் வரவுக்காகக் காத்திருக்கும்
உழவனின் காதலி.. நீ தான்
கடைக்கண் பார்வை காட்டு

எழுதியவர் : ச.சேட்டு மதார்சா (29-Aug-18, 3:43 pm)
Tanglish : mazhai
பார்வை : 82

மேலே