காதல்
அவள் வந்தாள் அங்கு நின்றாள்
எதிரில் நின்ற என்னைக் கண்டாள்
அதில் அந்த பார்வையில் கண்டேனே
நான் நூறு நிலவு ஒரு நிலவாய்
எரியும் ஓர் பார்வை என் நெஞ்சை
அப்படியே அள்ளிக்கொள்ள குளிரால்
அணைத்துக்கொள்ள என் உள்ளம்
கொள்ளைக்கொள்ள அப்பப்பா
என்ன பார்வை அது எப்படிச்சொல்வேன்
நான், பார்வையும் பாடுமோ ராகங்கள்
என்று நினைக்க அதில் அபிநயங்களும் கண்டேனே
பார்வைதான் இப்படி என்று நினைக்கையில்
கள்ளூறும் அவள் இதழ்கள் திறந்து
புன்னகையும் மெல்ல தந்திட அதில்
மோகனம் தெரிந்ததே என் காதில்
வந்து மோகன ராகம் பாடியதே
கொஞ்சும் வெள்ளி கொலுசணிந்த
கால்கள் மெல்ல மெல்ல அடி வைக்க
பைங்கிளி அவள் அன்னம்போல்
நடந்து வந்தாளே அந்த நடையில்
கண்டேனே நான் பரதம் தந்த
சிருங்கார ஜதியும் லயமும் ஸ்ருதியும்
' ததிமி, தோம், தோம் ,தாதிமி
தோம் தோம் தோம்' என்று
என்று என் காதில் ஒலிக்க
பூவையவள் போர்த்திய பொன்னாடையில்
தெய்வமகளாய் காட்சி தருகின்றாள்
என் முன்னே .........................
ஒன்றும் புரியாமல் நிற்கின்றேன் நான்
இவளென்ன என்னோடு காதல் புரியவந்த
தேவதையா, நான் என்ன தேவமகன்தானோ
என்றெண்ணி இவள் என்மீது
அந்த பெருநிலவின் பார்வை தந்தாளா
இல்லை நான் எதிரில் காண்பதுதான்
வெறும் என் கற்பனையில் முளைத்த
காதல் தேவதையா ................