இறைவன்
ஏழையின் சிரிப்பில்
இறைவன்
என்னும் வாசகத்தைப்
படித்துவிட்டு...
கோவில் வாசல்
பிச்சைக்காரனுக்கு
ஒரு ரூபாய் கூட
போடாமல்
கோவில் உண்டிலில்
இறைவனுக்காகக்
கோடி ரூபாய்
போட்டானாம்
பக்தன்