இடிவெயில்
ஒருகதை விடுகதை வாழ்க்கை
ஒருகளம் போர்க்களம் வாழ்க்கை
இருமனம் திருமணம் வாழ்க்கை
இருளது விலகுது வாழ்க்கை -
மனமது மயங்குது வாழ்க்கை
குணமது தயங்குது வாழ்க்கை
துணிந்திட துணிந்திட வாவா
துயரதை துளையிட வாவா
இடியதை மலைதனில் இறக்கிடு
இயன்றதை இயல்பதை மாற்றிடு
இடிவெயில் சுடுமழை ஆக்கிடு
கனவினை கனவினை கலைத்திடு
மனிதனே மனிதனாய் மாறிடு...!