அன்பை நீங்கள் ஏன் நாடவில்லை,
நீங்கள் என்னை சிறுவன் என்று ஒதுக்கி வையுங்கள்.
நான் தங்களை பெரியவர்கள் என்று ஒதுங்கிக் கொள்கிறேன்.
அன்பாகிய இறைவனின் சன்னிதானத்தில் நீங்கள் நெருங்கினாலும் அன்பாகிய இறையை நெருங்க முடியாதவர்களாக சுற்றி திரியுங்கள்.
ஜெபங்கள் பல செய்யுங்கள்.
பயனென்ன?
அன்பே வாழ்க்கையின் பாதை என்றால் அன்பாகி இறைவனே வழிகாட்டுகிறான்.
அர்த்தம் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
அன்று இந்துக் கடவுளாம் வாசதேவக் கிருஷ்ணன் பாண்டவர்களின் மனதில் விதைத்த பழிவாங்கும் உணர்ச்சி இன்றும் உங்களில் தணியவில்லை.
வாழ்க்கையில் உணவு, உடைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அனைத்து மதங்களிலும் பழி உணர்வே ஒற்றுமையாக உள்ள நடைமுறை.
அன்பே எனது வாழ்க்கை முறை என்று வாழ்ந்திடப் பயம்.
சகிப்புத் தன்மையே என் வேதம் என்று பின்பற்றிட பயம்.
வாழ்க்கை என்பது தியாக சிந்தனையுள்ளதாக இருந்தால் அங்கு துன்பங்களைத் தாங்கும் வலிமை பிறக்கும்.
துவண்டு விழும் நீங்கள் ஒன்றுபட இனம், மொழி, சாதி, மதம், சமயங்கள் என்றே குரைக்கின்றீர்கள்.
ஆதிமூலமாகிய அன்பை நாடவில்லை.
அன்பை நாடி நற்பண்புகளை பெற்று,
எதிர்கால சந்ததியினர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்திட நீங்கள் தாயாராக இல்லை.