காதல் என்றால்

அன்பின் உச்சம் பாசம் அதன் வெளிப்பாடே கண்ணீர்
அந்த உப்பு தேனைத் துடைத்து விடுவதே காதல்
உரிமையின் உச்சம் கோபம் அந்த சினத்தின் உச்சமோ மௌனம்
அந்த மந்திரத்தை பரிமாறிக் கொள்வதே காதல்
தனிமையில் விளைவது தாபம் அந்தத் தாபத்தில் முளைப்பது நெருக்கம்
அந்தக் கருணையில் பிறப்பதே காதல்
தன்னலத்தின் விளைவே ஏழ்மை அதன் தலைமையே தனிமை
அந்தத் தனிமைக்கும் துணைத் தருவது காதல்
வறுமையில் சிறந்தது சிறுமை அந்த சிறுமையின் முகமே வெறுப்பு
அந்த வெறுப்பையும் அரவணைப்பது காதல்
கண்ணோட்டத்தின் பிம்பமே சூழ்நிலை அதன் ஓவியமே மனிதன்
அவள் கதையை புரிந்துக்கொள்வதும் காதல்
பண்பில் முதன்மை தானம் அந்தக் கொடையில் உத்தமம் அன்பு
அந்த அன்பை ஏந்திக் கொடுப்பது தான் காதல்

எழுதியவர் : ரா.சா (31-Aug-18, 7:02 pm)
சேர்த்தது : ராசா
Tanglish : kaadhal endraal
பார்வை : 515

மேலே