முத்தான முத்தல்லவோ

உழைப்பாளி நெற்றியில் வியர்வை முத்து
மண்ணில் விழுவது மாரி முத்து
வயலில் விளைவது நெல் முத்து
மங்கையின் பற்கள் முத்து முத்து
சிங்காரி அவள் கைகளில் வளையல் முத்து
அங்கயற்கண்ணி அவள் நீண்ட கழுத்தில்
ஆரம் முத்து முத்து ஆரம் முத்து
அம்மா குழந்தைக்கு தருவது ஆசை முத்து
காதலன் காதலிக்கு வழங்குவது காதல் முத்து
நல்லோர் கூட்டில் விளைவது நட்பு முத்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (1-Sep-18, 2:42 pm)
பார்வை : 107

மேலே