மனசு மத்தளம் கொட்டுது

காய்ந்து போன செடியில் விழுந்த மழைத்துளி போல!

கலங்கரை விளக்கை கண்ட கப்பல் மாலுமி போல!

தாகத்தில் தவித்தவனுக்கு மோர் கிடைத்தது போல!

வருடங்கள் பல தேடிக் கிடைத்த பொக்கிஷம் போல!

வானத்து வெண்ணிலவு என் வாசலுக்கு வந்த்து போல!

அன்பே!
நீண்டநாட்கள் கழித்து
அலைபேசியில் உன் குரலை கேட்ட பின்பு!

மகிழ்ச்சியில் மத்தளம் கொட்டுதடி என் மனசு!

எழுதியவர் : சுதாவி (1-Sep-18, 5:16 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : alaipesiyil nee
பார்வை : 143

மேலே