கன்னக்குழியில் தேநீர் தருவாயா
காலை பொழுதில், மஞ்சம் மீதில்,
உன் கன்னக்குழியில்
தேநீர் தருவாயா !
நான் மெல்லக்குடிக்க
உன்னை அணைக்க
தேகம் மலர்வாயா !
என் இதழின் ஈரம்பட
இடையோராம் விரல்பட
மீண்டும் குளிப்பாயா !
சொட்டும் நீரை
என்னுடல் கொண்டே
நீயும் துடைப்பாயா !