தனிமை

இன்றும் நித்தம் போல
என்றும் உனைத்தேடி வருவேனோ
என்றும் இருப்பது போல
இன்றும் இல்லாமல் இருக்கின்றாயோ

கட்டி வைத்த கூந்தலை எந்தன்
கையால் கலைக்க மறந்தேனோ
சிந்தும் உந்தன் சிரிப்பினை - கொஞ்சம்
சிலிர்த்து அள்ள மறுப்பேனோ

என்றும் இருக்கும் உந்தன் வெப்பம்
இன்றும் இருப்பது என்பது போன்றே
எழுந்து தெளிந்து பார்த்தேன்
இல்லை என்பதையே
மறந்து போனேன்

ஏக்கம் என்ற ஒரு சொல்லுக்கு
ஆற்ற மறுசொல் இல்லாமல் போனதை
ஏற்க மறுக்கிறதோ எந்தன் மனம்

-- என்றும் பிரிவுடன்.
மாவிஆ

எழுதியவர் : மாவிஆ (1-Sep-18, 7:00 pm)
சேர்த்தது : மாவிஆ
Tanglish : thanimai
பார்வை : 130

மேலே