மீனிலிருந்து

பறக்க மட்டும் இல்லை
ரெக்கை
நீந்திவிடவும் தான்
மீனுக்கு
எத்தனை சுழற்சி
பள்ளத்தில்
அத்தனை சூழ்ச்சி
சுறாக்கள்
சிக்காமல் இடம்
பெயர்ந்து
தன்னை காப்பாற்றிக்கொள்கிறான்
மனிதன்
இதை டார்வின் சொல்லித்தான்
தெரிய வேண்டுமா
மீனிலிருந்து மனிதன் என்பதை

எழுதியவர் : (2-Sep-18, 11:44 am)
சேர்த்தது : sanmadhu
பார்வை : 35

மேலே