அமைதியான

வண்டி யோட்டி ஓய்வெடுக்கும்
வண்டிக் காரர் வாழ்க்கையிலே
அண்டிப் பிழைக்கும் அவலமில்லை
அலைந்து பெற்ற கடனுமில்லை,
பண்டிகை மற்றும் பிறநாளும்
பார்வைக் கவர்க்கே ஒன்றேதான்,
உண்டே உழைத்துபின் உறங்குவதால்
உளதே வாழ்வில் அமைதியொன்றே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Sep-18, 6:55 am)
Tanglish : amaithiyaana
பார்வை : 331

மேலே