நல்லாசிரியர்
நெடுமால் திருமுருகா நித்தம் நித்தம்
இந்தளவா, வாத்தியார் போகாரோ..
என் வயிற்றேரிச்சலும் தீராதா 'என்று
அன்றொருநாள் நான் பள்ளியில் என்
கணித ஆசிரியர் வகுப்பு நுழையும்முன்
பலகையில் எழுதிவிட்டு ஒன்றும் தெரியாதவன்போல்
அமர்ந்திருக்க, ஆசிரியரும் வந்தபின் நான்தான்
எழுதியது என்று என் குட்டும் எப்படியோ வெளிப்பட
என் ஆசிரியர் அவரோ , கோபமோ வெறுப்போ
என்மீது கொள்ளாமல், கூறினார்' வாசனே
உனக்கேன் என்மீது இத்தனை கோபமும் வேதனையும்
கணிதம் உனக்கு புரியவில்லை அது என் தவறே
என்று கூறி, அன்றுமுதல், பள்ளிமுடிந்தபின்னே
எனக்கு தினமும் ஒரு மணிநேரம் இலவசமாய்
கணிதம் போதித்து, புரியவைத்தார் பயமும் போக்கினார்
பின்னர் அந்த போதனையே எனக்கு கல்லூரிப்படிப்பில்
கணிதத்திலும் கொள்ளை எண்கள் எடுத்திட வழிவகுத்தது
இன்று நான் சொல்வேன் கணிதமின்றி வாழ்க்கையில்
இயக்கமே இல்லை என்று ..........என் பிள்ளைக்கும் நான்
கணிதம் கற்றுத்தந்து ......அவன்'வாத்தியார் வாராரோ
இன்னும் கணிதம் கணிதம் கற்று தரமாட்டாரோ' என்றான்
பள்ளி வகுப்பறையில்....!!!!!!!!!!!!!!!!!!!!!! இதோ நேற்று;
எனக்கு எழுத்தறுவித (கணிதம்) அந்த ஆசிரிய பிதாமகனுக்கு
நன்றிகூறி .......அவன் இல்லை இன்று....ஆயின் அவர் நிழலில்
இன்றும் நான் வாழ்வதை எண்ணி மகிழ்கின்றேன்.
வாழ்க இத்தகைய நல்லாசிரிய பெருமக்கள்
வளர்க அவர்கள் மாபெரும் தொண்டு !