வாழ்க ஆசிரிய திலகங்கள்

நல்லாசிரியன் என்போன்,' உற்ற நண்பன்
வேதாந்தி, அவனே வழிகாட்டியும்' ஆவான்;
ஆடு, பாதைத்தவராது புல்நாடி மேய்ந்திட,
நல்லதோர் மேய்ப்பவன் வேண்டும்-அதுபோல்
மாணாக்கருக்கு அவர்கள் மனதில் ஆழ்ந்து
பதியுமாறு நல்லவைகளெல்லாம் போதித்து
அவர்களுக்கு வாழ்வில் முன்னேற நல்லதோர்
பாதை அமைத்து தருபவனும் நல்லாசிரியனே
'தாய், தந்தை, தெய்வம்,குரு' என்று இவர்கள்
நால்வர் நம்மை வாழவைப்பவர் என்பதனால்
குரு அல்லது நல்லாசான் அவன் மேன்மை தெளிவாகிறது;
துரோணன் இல்லையென்றால் அர்ஜுனன்
மாவீரன் அர்ஜுனனாய் உருவாகி இருப்பானோ ?

ஆதலினால், ஆசிரிய பெருமக்களே நாளைய
நல்ல மாணாக்கர்களை உருவாக்குபவர்கள்
நல்ல மாணாக்கரில், நாளைய நல்லாசிரியனும்
உருவாகலாம், அப்துல் கலாம்போல் விஞான
மாமேதையும் உருவாகலாம் ,; அப்துல் கலாம்
தமக்கு போதித்த பள்ளி ஆசிரியரை மறந்தாரில்லை
அவர்களை தம் எழுத்துக்களிலும் போற்றி மகிழ்ந்தார்.

நாமும் நமக்கு பாடங்கள் போதித்து வாழ்க்கைக்கு
அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்த ஆசிரியர்களை
மறத்தலாகுமா? அது தாயை மறத்தலுக்கு சமம்

இன்று ஆசிரியர் தினம் நம் நாட்டில்,
ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்
நம் பாரதம் கண்ட ஒப்புயர்வற்ற ஆசிரியரை
அவர்கள் ஆற்றிய பெரும்பணிகள் நாட்டிற்கு
அவர்கள் விட்டுச்சென்ற மாணவ ரத்தினங்கள்
இவர்களை நினைவில் வைப்போம் இவர்கள்
பாதையில் நாமும் செல்ல விழைவோம், வெற்றிபெறுவோம்

இன்றைய நல்லாசிரியன் நாளைய ஆசிரிய
திலகங்களை உருவாக்குபவன்-

நீடு வாழ்க ஆசிரியர்கள், அவர்கள் மகத்தான தொண்டு
இறைவா அவர்கள் நீடு வாழ, வளமெல்லாம் பெற்று வாழ
நீதான் எல்லாம் அவர்க்கு அளித்திடல் வேண்டுமப்பா.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Sep-18, 8:56 am)
பார்வை : 103

மேலே