ஆசிரியர்கள் தினம்
Captain Yaseen:
தன்னை உருக்கி
மாணவ மணிகளுக்கு
ஒளிவெள்ளம் பாய்ச்சும்
மெழுகு ஆசிரியர்களுக்கு...
தன்னை உளியாக்கி
வலியைத் தான் தாங்கி
வலிக்காமல்
மாணவ மனங்களைச் செதுக்கும்
ஆசிரியச் சிற்பிகளுக்கு...
தானாய் முன்வந்து
கனி கொடுத்தபின்னும்
கல்லடி படும்
இனிய ஆசிரியர்களுக்கு...
தனித்தனியாய்த் திகழும்
தாய் அன்பையும்
தந்தையின் கனிவையும்
ஒன்றாய் ஊட்டும்
மார்பக ஆசிரியர்களுக்கு...
ஏறி மிதித்தாலும்
ஏற்றி விடும்
ஏணி ஆசிரியர்களுக்கு...
ஏற்றம் பெறும்
மாற்றம் தரும்
ஆற்றல் வழங்கும்
பாட்டைகளாய் விளங்கும்
பண்பாட்டு ஆசிரியர்களுக்கு...
விலங்கு நிலையை
விளங்க வைத்து
விலங்கா நிலையை
விளக்கி - அறிவு
வழங்குகின்ற
களமாம் ஆசிரியர்களுக்கு...
தியாகம் புரியாமல்
தீ யாக வேள்வியில் தள்ளும்
நோயாளிகளிடமும்
தியானம் கலையாத
தியாகத் துறவியாய்த் திகழும்
தியாகச் செம்மல்களாம்
ஆசிரியச் செல்வங்களுக்கு
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
- கேப்டன் யாசீன்