மதுபானம்

நீ நாகரிகத்தின் நவீனமாம்..
சந்தோஷத்தில் சம்பந்தியாம் ..
துக்கத்தில் துணைவனாம் ..
ஏக்கத்தில் ஏற்புடையவனாம்...
வெற்றியில் வேண்டியவனாம்..
தோல்வியில் தோழனாம் ...
சூது சேர்கையில் கூடி வருபவனாம் ..
மாது வெறுக்கையில் தேடி வருபவனாம் ...
இப்படி
வழக்கங்களில் இல்லாப் பழக்கம் ..
இன்று பழக்க வழக்கங்களில் ஒன்றானதே!
மாது விலக்கியதால்
மது விலக்கை எதிர்க்கும் சிலர் ...
போதை மட்டும் தருவதில்லை
போதனையும் தருகிறாய் என்று சிலர் ...
துட்டு நிறைய இருந்தா..
சிரிச்சுகிட்டே வருவயாம்..
கொஞ்ச துட்டு கொறைஞ்சாலும்
சிறுத்தும் நீயே வருவயாம் ...
மாதர் சங்கம் கொடிபுடிச்சும்...
தாலிக் கொடிகள் அறுந்த போதும்..
தொப்புள் கொடிகள் பிரிந்த போதும் ..
உன் வெற்றிக் கொடிதான் வேரூன்றியிருக்கு ..
கவர்மெண்டு கஜானாவிற்கு
நீயே கருவூலம் ..
பல கன்னியர் வாழ்க்கை
உன்னாலே நிர்மூலம் ..?!!