சட்டென்று முளைத்தக் காதல்

மழைக் காலத்தை நினைத்து கோடை வானம் அழுவது போல்
சற்றேன்று என் விழியோரத்தில் முளைத்தது சிறு கார் மேகம் ஒன்று
அவள் துள்ளித் திருந்து ஒரு பேதை போல் வளர்ந்து
கண்ணிமைக்கும் முன்னே எங்கும் வியாபித்துக் கிடக்க
அவள் நிழலில் என் வான் நிலை மறந்து சற்றே குளிர்ந்தது
முகம் சிவந்து அவளைத் தொட மின்னலாய் மாறியது
மழையாய் மாறி அவள் பூமிக்கு உயிர் ஊட்டுவதைப் பார்த்து
என் கவலை மறந்து கை தட்டி இடியோசையில் குதித்தேன்
பூவின் மீது அவள் சிந்திய தேனை ருசிக்கப் பறவையாய் இறங்கி
புல்லின் நுனியில் அவள் இருக்கக் கண்டு சிறு பூச்சி போல் சென்று ரசித்தேன்
அவள் வருகையில் ஒளி கூட சிதறி வண்ணங்களாய் சிரிக்க கண்டு வியந்தேன்
பிற உயிரினங்களும் என்னுடன் மகிழ்ச்சியில் நனைந்து அகம் நெகிழ
அவள் பிரிவை பொறுக்க முடியாது மீண்டும் விண் சென்றடைந்தேன்

எழுதியவர் : ரா.சா (7-Sep-18, 8:43 am)
சேர்த்தது : ராசா
பார்வை : 478

மேலே