முதுமை
முதுமை என்பதும் இனிமைதான்
தனிமை
காணாத வரையில்
முதுமைக்கு
முகவரி தந்த
இளமை
தொலைந்தது
கூட
இனிமையாக
இருக்குமே
நிகழ்வுகளை
நினைத்து
கனவாக
காணும் போது
நட்பு வட்டத்தில்
திளைத்து
மூழ்கிய
நாட்களை
மறக்க முடியுமா
இல்லை
காத்திருந்து
காதல் சொல்லி
நேற்றுவரை
சேர்ந்திருந்த
என்
உயிரை எனக்கே தந்த
என் இனிய
உறவை
மறக்க முடியுமா
நல்ல
நினைவுகளுடன்
உறவுகளும்
சேர்த்து வைத்தால்
இந்த
முதுமையும்
இனிமைதான்
கனவுகள் காண