நான் கொடூரமானவன்

என்னை சுற்றி இருப்பவர்களுக்கு என் மேல் வெறுப்பு அதிகமாகவே இருக்கும்.
நீங்கள் வெறுக்கும் அளவிற்கு நான் கொடூரன் தான்.
சாதி, மத , இன, மொழி, நிற பேதங்களை விமர்சிக்கும் கொடூரன்.
அன்பே அனைத்தும் என்கிற கொடூரன்.
கருணையில்லாத அரசியல் பிரிவினைவாதிகளை விமர்சிக்கும் கொடூரன்.

தாய்ப்பால் கூட விஷமாகும், பிஞ்சுகளை கொன்ற தாய் போல் பலர் சுற்றி திரிவதால் பெண்களோடு சகோதரனாக மட்டும் பழகும் கொடூரன்.
யாரையும் நம்பாதீர்கள்,
இறைவனுக்கும் உங்களுக்கும் இடைத்தரகர் தேவையில்லை என்று ஆன்மிக வியாபாரிகளை விமர்சிப்பதால் நான் கொடூரன் தான்.

கடவுள் இட்ட பிச்சையில் சிறு துளியை கடவுளே லஞ்சமாக பிச்சையாக படைத்து ஏமாற்றாதீர்கள் என்பதால் நான் கொடூரன் தான்.
கொடூரமான எண்ணங்களை விட்டொழியும் அகிலமே நம் இல்லம் என்பதால் நான் கொடூரன் தான்.
அடுத்தவரை அடக்கி ஆள நினைத்தவரெல்லாம் மண்ணுள்ளே அடக்கமாக ஏன்டா ஏமாற்றிப் பிழைக்கிறீர்கள்? என்று கேட்பதால் நான் கொடூரமானவன் தான்.
உங்களை கொடுமைகளெல்லாம் நீங்கள் உருவாக்கிக் கொண்டவையே என்று நான் கூறுவதால் கொடூரமானவன் தான்.
பொறாமை என்னில் இல்லை.
நான் கொடூரமானவன்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Sep-18, 8:40 am)
பார்வை : 814

மேலே