அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு---------------------மலரும் நினைவலைகள் -----------
4 வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.
7 வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.
8 வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.
12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க அவசியமில்லை.
14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.
21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த என்ன எதிர் பார்க்க முடியும்?
25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.
30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்
35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட வேண்டும்.
50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?
60 வயதில் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு யோசனை கேட்கலாம்.
படித்ததும் பகிர்ந்ததும் - வீணா