மழையும் நண்பனும்
வெயிலோ மழையோ
நண்பன் அருகிலெனில்
உற்சாகம் இதயம் வரும்
*****
இலையே குடையாக
நட்பே உறவாக
மழையில் நடைபயில
மேகம் சிரித்திருக்கும்
புன்னகைத்து நடந்திடுவோம்
மழைமகிழ நனைந்திடுவோம்
*****
மழை பிடிக்கும்
நனைய தினம் பிடிக்கும்
நண்பனுடன் நனைய மிகப்பிடிக்கும்
******
மழை நாளில்
நான் செய்யும் கப்பலில்
நண்பன் உட்காருவான்
நானும் வண்டாகி அருகில் உட்காருவேன்
நாங்கள் சேர்ந்தே
காடு கடப்போம்
ஆறு கடப்போம்
உற்சாகப் பெருக்குடன் முடிவில்
கடலில் கலப்போம்
*****
நட்புக்கு மழை நாளில்
குடை வேண்டாம்
குடையெனும் தடை வேண்டாம்
ஓயாய மழையாட்டம்
ஓயாமல் வேண்டுமடா!
*****
மழைக்கு எங்களைப் பார்த்தவுடன் தான்
எத்தனை ஆனந்தம்
பெருங்குரலெடுத்து
அப்படிச் சிரிக்கிறது
*****