இரவிலும் பகலிலும் என்னவளே உன் நினைப்பு

கொண்டை முடியழகு
கொவ்வைப்பழ இதழழகு
வண்டுருளும் விழியழகு
வகிடெடுத்த குழலழகு
தென்னங்கள் கன்னங்கள்
தெவிட்டாத பல்வரிசை
அன்னத்தின் நடையசைவு
அகவுமயில் உடல்தோகை
சேற்றில் நடக்கையிலே
சேட்டைகள் புரிவாய் நீ
ஆற்றில் குளிக்கையிலே
ஆக்கினைகள் தருபவள் நீ
காட்டுமுல்லைக் கொடிபோன்ற '
கள்ளியுந்தன் இடையாலே
போட்டென்னை வதைத்தாயே
பொன்பூவாய்ச் சிரி த்தாயே
மயக்கும் மொழியாலே
மனதைக் கெடுத்தவளே
வியக்கும் அழகாலே
விந்தைகள் புரிந்தவளே
ஒற்றையடி பாதையிலே
ஒத்தையாய் நடக்கயிலே
சுட்டும்விழிச் சாடையாலே
சொக்கவைத்துச் சென்றவளே
காதலைச் சொல்கையிலே
காணமல் போனபுள்ள
பாதிவழி போயென்னைப்
பார்வையால் கொய்தாயே
இரவிலும் பகலிலும்
என்நெஞ்சு குழையுதடி
வரவுபார்த்து வழியெங்கும்
வட்டமிட்டே அலையுதடி
அஷ்ரப் அலி