இதயத் துடிப்பு
உன் குரலை கேளாது என் மனதில்
ஏனோ தயக்கம் எனது இமைகளை
மூடி தயங்குகிறேன் என் மார்பில் உன்
முகம் பதித்து உன் மூச்சு காற்றை
என்னுள் வாங்கிக்கொள்ள
உதடுகள் சொல்லாத
ஏக்கங்களை என் இதயம்
சொல்ல துடிக்கிறது
ஆனால் என் இதயத்
துடிப்பின் ஓசையை நீ
உணராது போனது ஏனோ