பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க – பாவனி ராகம்
கமலஹாசன், ரோஷினி நடித்த குணா (1991) திரைப்படத்தில் ‘பாவனி’ ராகத்தில் ஜேசுதாஸ் குழுவினர் பாடிய பாடல் ‘பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க’ யுட்யூபில் கேட்கலாம்.
நாயகி நான்முகி நாராயணிகை நளின பஞ்ச சாயகி
சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு நாயகி
மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயாகியாதி உடையாள் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம்
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க
ஊனுருக உயிருருக தேன் தரும் தடாகமே
மதி மருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே (பார்த்தவிழி)
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை
கொண்ட இறைவர் வலிய நெஞ்சை நலம்
கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல்லரவின்
படங் கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிவுரையே! வேதப் பரிவுரையே! (பார்த்தவிழி)