திருப்பிரமபுரம் - சம்பந்தர் தேவாரம் பாடல் 3

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

கலி விருத்தம்
(மா விளம் விளம் விளம்)

புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே. பாடல் எண்: 3

குறிப்புரை :

இதய கமலத்திலிருந்து இடையறாத ஆனந்தம் பொழியப்பட்டு என்னை மலபோதத்தில் தள்ளாமல் எனக்கு அடைக்கலப் பொருளாயுள்ளவன்.

ஆன்மாக்களுக்கு இரட்சையாக முண்டம் போலி ருந்த திருநீறை அணியப்பட்ட மிக்க கருணையான வனே யான்பாடும் பாடலை உவந்துள்ளவன்.

புலிக்காலும் புலிக்கையும் பெற்றுள்ள வியாக்கிர பாத முனிவருக்கு ஞானானந்தமாகிய நாடகத்தைக் கனகசபையிலே ஆடல் செய்யும் பரத வித்தை யைக் கற்றுள்ளவன்.

வியம் என்றது விய எனக் கடைகுறைந்து நின்றது.

மேலே சொன்ன லீலைகளெல்லாம் செய்கின்ற சிவன் தனது இச்சையால் பொருந்தி இருக்கும் ஊர் பிரம்மா பூசித்த புகலி என்னும் திருப்பதி ஆகும்.

கருத்துகள்:

வேலாயுதம் ஆவுடையப்பன் • 9 மணி நேரத்திற்கு முன்
மலரும் ஆன்மீக மணம் நிறைந்த பாடலும் விளக்கமும் குறிப்புரையும் படித்தேன் பகிர்ந்தேன்
நாட்குறிப்பில் பதிவு செய்தேன்.
படைப்புக்கு பாராட்டுக்கள்

Shyamala Rajasekar • 20-Jun-2014 2:50 pm
குறிப்புரையோடு ஞான சம்பந்தரின் தேவாரம் ஏகபாத அந்தாதியாக
படித்து மகிழ்ந்தோம் ஐயா !

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-18, 3:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே