ரகசியம்
இருள் சூழ்ந்த நிலை ஊரே அமைதியாக இருக்க ஆந்தைகள்
கத்தி கொண்டும், வௌவால்கள் அங்கும் இங்கும் பறந்து கொண்டும்,
மரங்கள் அசைந்து காற்றாய் வீச
நாய்கள் ஊலை சத்தம் கேட்க ,எவருமே தெருவில் இல்லை.ஆள் நடமாட்டம் இல்லாத நிலை வீட்டு கதவுகள் ஒருவரும் திறந்து வைக்க
படவில்லை......
அந்த இரவு நேரத்தில் ஊருக்குள்
அன்பு என்ற இளைஞன் தன் பெரியப்பா வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான்....
கிராமம் என்றதால் ஊருக்கு வெளியே பேருந்து நிறுத்தப்படும்..
அங்கிருந்து இரண்டு மைல்கள் நடந்து
தான் வர வேண்டும்...
பச்சை பசேல் என வயல்கள் சூழ பம்பு செட்டுகளில் இருவர்கள் விளையாட
மாமரம்,தென்னை மரம் ,வாழைமரம்
என் மரங்கள் நிறைந்து இருக்க கோவில்களின் கோப்புரங்கள் எங்கு நின்றாலும் தரிசிக்க அவ்வூர் அமைந்துள்ளது......
அனைத்தையும் ரசித்து கொண்டே
தன் நடையை தொடர்ந்த அன்பு
தன் ரேடியோ பெட்டியில் பாட்டை கேட்டு கொண்டே நடந்து ஊர் வழியே வந்தான்....
ஆறு பாலத்தை கடந்து அருகில் இருந்த அருவியை ரசித்து கொண்டே வந்தான்.....
இரவு நேரத்தில் தான் அவன் அவ்வூரை அடைய முடிந்தது......
இரவுகளில் அவ்வூரின் நிலை தலைகீழாக மாறியது..... காலை பொழுது நேரத்தை ரசித்ததை நினைத்து இந்த இரவு பொழுத்தை கண்டு வியந்து போனான்.......