மனைவி ஒரு வரம்

என் உயிரை தீண்டிய ஐம்புலனே
என் இருளை நீக்க வந்த ஆதவனே
என் இதயத்தை ஆட்கொண்ட அரசியே
அன்பால் மனதைக் கவர்ந்த பாவையே

நான் தலை நிமிர
பூமியை நேசித்தவளே
என்னை முழுமையாக்க
உன் குடும்பத்தார்க்கு கண்ணீருடன் விடை தந்த வள்ளலே

என் வீட்டிற்கு உயிராய் வந்தாய்
என் ஜனனத்திற்கு பொருள் தந்தாய்
என் ஆகாயத்தில் நிலவாய் குடிகொண்டாய்
என் உயிரை நில்லாமல் ஓடச் செய்யும் நதியே

உன் ஆசைகளை மறந்து
உன் துன்பங்களை மறைத்து
உன் விருப்பு வெறுப்புகளை என்னவர்களுக்காக விட்டுக்கொடுத்து
எத்தனைமுறை கேட்டாலும் எதுவும் சொல்லாமல் தினமும் கயனாய் வாழச் செய்தாய்

என் பெற்றோரை அன்பால் வென்றாய்
என் உறவினரை பண்பால் வென்றாய்
என் நண்பர்களை விட்டுக்கொடுத்து வெல்ல
உன் பண்பைக் கண்டு என்னுள் பொறாமை ஏல
உன்னை போல் மாறி வாழ வேண்டும் என
என் சிந்தையை யோசிக்க வைத்தாய்

நான் தந்தையாக நீ மறு ஜனனம் எடுத்தாய்
வலிகளைக் கூட புன்னகையால் வென்றாய்

என் கஷ்டங்களை நொடியில் மறக்க செய்வாய்
சோகத்தால் என்னை சொரவிடாமல்
என்னுள் சந்தோசத்தை மட்டும் பரப்பும் பட்டாம்பூச்சி நீயடி

அப்படிப்பட்ட உந்தன் அழுகையின் வலிகளை உணராமல்
உன் வேதனைக்கு ஆறுதல் கூற கூட நேரமில்லாமல்
வேலை, பணம் என சுயநலமாய் நான் இருக்க
பொறுமையால் என்னை வென்றாய்
தோழனை என்னை காப்பாற்றி
என்னை மனிதனாய் மீண்டும் வாழ செய்தாய்
நீ செய்த உதவிகளுக்கு
இப்பிறவியில் என்னால் கைமாறு செய்ய முடியாது பொண்ணே

எழுதியவர் : கண்மணி (9-Sep-18, 11:22 am)
Tanglish : manaivi oru varam
பார்வை : 14765

மேலே