காதல்

அந்தி சாயும் வேளை
நதிக்கரையில் நான்
உன்வரவிற்காக காத்திருக்க
நீயோ வரவில்லை
ஏனோ தெரியவில்லை
என் மனதோ வேதனையில்
அந்திப்போய் இரவானது
இன்னும் அவள் வாராது போக
நீலவானில் இரவின் இருளைக்கிழித்து
கீழ்வானில் முழுநிலவு வந்தது
நிலவே நில்லு கொஞ்சம்
உன்னோடு பேசவேண்டும் என்றேன்
நிலவு சொன்னது'எனக்கேது நேரம் அதர்க்கெல்லாம்
உன்னோடு பேச, அங்கு என் முன்னே பார்
ஓடுதே வெண்மேகம் இப்போது
அதை நான் பிடிக்கவில்லை எனில்
எப்போதும் பிடிக்கமுடியாமல்
எட்டாமல் ஓடிவிடும் என்று கூறி
ஓடிவிட்டான் நிலவும் ..................
என்னை தனிமையில் விட்டுவிட்டு
நதியோரம் இவ்வளவில் கொக்கு ஒன்று
என்னருகில் வந்து நிற்க
அத்தோடு பேச நான் முயல
கொக்கு சொன்னது,'அதற்கெல்லாம்
எனக்கேது நேரம், நிலவொளியில்
ஓடும் நதி நீரில் உரு மீனுக்கு
காத்திருக்கிறேன் நான்' என்று கூறி
ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருந்தது கொக்கும்

தனிமையில் நான் ........................
'தனிமையிலே ......தனிமையிலே
இனிமைக்காண முடியுமா .......
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் கூடுமா...
என்று அன்றைய திரைப்பாடலை
மெல்ல பாட..........................
அந்த நிலவுபோல என்னவளும்
இருளைக் கிழித்து என் பின்னால்
தோன்றி, என்னை அன்பே என்று கூறி
அணைத்துக்கொள்ள ................
தனிமையும் போய் இனிமையும் வந்திட
இப்போது மேகத்தை அணைத்திருந்த
நிலாவைப்பார்த்து இருவரும் ....
'இன்பம்பொங்கும் வெண்ணிலா வீசுதே ...
என்றோர் பாடல் நினைவுக்கு வர மெல்ல
பாட தொடங்கிவிட்டோம்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Sep-18, 11:09 am)
Tanglish : kaadhal
பார்வை : 368

மேலே