காதல்
உன்மடிமீது தலை வைத்து
நான் படுத்து வானத்தின்
தாரகைகளை எண்ணிட நினைக்கையில்
நிலவென வந்து நீ என்னை அணைத்தாய் -அதில்
தென்றல் தீண்டிய இன்பம் கண்டேன் அன்பே,
பின் இதழோடு இதழ் வைத்து
முத்தம் தந்தாய் -அதில் ஓர் இன்பத்தீ
எழுந்து என் உள்ளத்தை தொட்டதைக் கண்டேன்
நான் அன்பே , இன்னும் இறுக்கமாய் என்னை நீ
அணைத்துக்கொண்டபோது விண்ணையே
தொட்ட இன்பசுகம் ஒன்று கண்டேன்
அதில் எழுந்த காமத்தீ
மண்ணை உணர்த்தியது
மண்ணில்பிறந்தவத்தவர்தானே நீங்கள்
என்று மண்ணில் நம்மை நிறுத்திட
தொட்ட சுகங்கள் எல்லாம் தீர்ந்தபின்னே
காதல் அலைஓசை என் இதயத்தில்
வந்து மோதியது ஓயாத அலைஓசையாய்
உன்மீது நான் கொண்ட காதலாய் அன்பே..