என் ஜீவன் வாடுது
அன்பே...
கவிதை எழுதிய உன் விழிகள்
ஏனோ கணைகள் எய்துகிறது
பூக்களாய் மலர்ந்த உன் முகம்
ஏனோ முள்ளாய் மாறியது
தென்றல் வீசிய உன் ஜாடை
ஏனோ புயலை வீசுகிறது
அமுதம் சிந்திய உன் வார்த்தை
ஏனோ ஆலகாலமானது
என்னவளே...
நீ தானே நான் நித்தம்
ஆராதிக்கும் தேவதை
போதும் எனக்கு இந்த வதை
தாங்காது என் இதயம்
எங்கே உன் காதல் உதயம்
வா அன்பே
உனக்காக என் ஜீவன் வாடுது...