என் நெஞ்சில் நீங்கா ஞாயிறு

எந்தன்
நெஞ்சில்
நீங்கா
ஞாயிறு ....

டயர் உருட்டி
ட்யர்ட் ஆகி
வீடு திரும்பி
வீட்டுப்பாடம்
எழுத அமர்வோம்...

பக்கத்து தெரு
சென்று
பம்பரம் சுழட்டி
பாட்டியிடம்
திட்டு வாங்குவோம்...

தட்டாங்கல்
ஆறும்
தட்டி எடுத்து
சொடுக்கு இட்டு
வெற்றி
சூடுவோம்...

பல்லாங்குழி
முத்தை
எண்ணிப்பிரித்து
எதிரியை
வீழ்ப்போம்...

அந்தி வேளை
திரும்பும்போது
திருடன் போலீஸ்
தெருவில்
களிப்போம்...

இரவு வந்ததும்
உணவு முடித்து
உறங்க செல்வோம்
நாளை
ஸ்கூல் செல்லவேண்டும்
என்ற
சோகத்தோடு...


உலகம்
மறந்து
உய்த்ததொரு
காலம்....

உலகம்
பார்க்க
ஓடி
உழைப்பதொரு
காலம்...



Happy Sunday...

எழுதியவர் : சரவணக்குமார் சு (9-Sep-18, 1:16 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 71

மேலே