மரணத்திற்கு ஒரு தூது

மனிதனென்ற இனத்தில்
இந்த மண்ணில்
பிறந்தநாள் முதலாய் -- பிறந்தநாள்
முதல்கொண்டு
இந்நெஞ்சம் நிம்மதியின்றி
அலைந்துக்கொண்டிருக்கின்றது!!

சுற்றி இருப்பவர்கள்
சில சூழ்நிலைகளை
புரிந்துக்கொள்ளாத வேளைகளில்
நிமிடங்கள் நகராமல் நரகமாக்குகின்றது...

வெள்ளை காகிதங்களால்
நேசிக்கப்பட்டாலும் -- வண்ண
காதிதங்களால் வாழ்வை
வெறுக்கின்றது...

உணர்வுகளைக் கொன்று விட்டு
உடமைகளை சுமந்துக்கொண்டு
இந்த ஜென்மம்
சுற்றிவருகின்றபோது -- மரணமே
"நீ" மட்டும் ஏன்
நெருங்கிவர மறுக்கிறாய்....!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (9-Sep-18, 5:46 pm)
பார்வை : 307

மேலே