கரும் புகை காட்டிவிட்டது

கரும் புகை அது,
பூமித் தாயின் நெருப்பான சுவாசக் காற்று,
அந்த அனல் காற்று பரவிய இடமெங்கும் உயிர்கள் வாழவில்லை,
கருகி சாம்பலாயின,
அது வெறும் பொட்டல் காடு,
ருத்ர பூமி,
சாந்தமான பூமியை மனிதர்கள் பங்கீட்டது போக மிச்சம் இருந்தது அந்த பூமி தான்,
எரிமலைகள் நிறைந்த அந்த இடத்தின் அடையாளம் இந்த கருமை நிற புகை தான்.

தானென்ற அகந்தையில் பட்டம் பதவிகளென்று மனித சமுதாயம் ஒழுக்கம் தவறி இருந்த காலம்,
சில அறிவியலாளர்கள் உறங்கி இருந்த எரிமலை வெடிக்கப்போவதாக கண்டறிந்து சொல்வதை யாரும் கேளிக்கையில் இடுப்பட்டிருந்த நேரம் கடல் நடுவிலே புகைமூட்டம் தென்பட நாலாபக்கங்களிலும் அதிர்வுகள் பரவி நெருப்புக்குவியலை பூமி உமிழ கடல் நீரும் நெருப்பாய் சூடேற எங்கனம் தாங்கும் சக உயிர்கள்?

உயிர்களெல்லாம் உடல்களை விட்டுப்பிரிய வெறும் சாம்பல் மட்டுமே மிஞ்ச மழையாய் கருமேகம் பொழிய சாம்பலும் கரைந்து போக அழகோவிய உலகு மீண்டும் உருவாகியது,
மீண்டும் உருவாகிய சுழற்சி இயற்கையில் மனிதர்கள் உருவார்களா என்பது கேள்விக்குறி.
மனிதர்கள் தங்கள் நாற்றத்தை மூடி வைக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால் கருமை நிற புகை மேலுயர்ந்து காட்டிவிடுகிறது நாற்றமெடுக்கும் மன இருளை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Sep-18, 12:50 am)
பார்வை : 1123

மேலே