அந்தப் பெரியவர் மாதிரி நானும்

அப்பா, அப்பா...

என்னடாச் செல்லம்?

அந்தத் தொலைக் காட்சிப் பெட்டில தெரியற அந்தப் பெரியவரப் பாருங்க.

மகனே அவுரு பெரிய கோடீஸ்வரர்டா. விமானக் கம்பெனி, மது ஆலைக்கெல்லாம் உரியையாளர்டா. சரி, அவரப் பத்தி என்ன சொல்ல வந்த?

அவரோட முடியலங்காரம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா. அவுரு மாதிரி நானும் முடி வளத்தி அவுரு மாதிரியே முடி வெட்டிக்கணும்பா.

டேய் மகனே அவுரு பெரிய கோடீஸ்வரரு. கோடிக்கணக்கில வங்கில பணம் கடனா வாங்கிட்டு கடனைக் கட்டாம்ம வெளிநாட்டுக்குப் போயிட்டாரு. அவுரு மாதிரி நீ முடி வெட்டிட்டா பள்ளிக்கூடத்தில உன்ன அனுமதிக்கமாட்டாங்க. வருங்காலத்தில நீயும் ஏமாற்றுப் பேர்வழி ஆகிடுவ. உம் புத்தி மாறிப்போயிடும். அதெல்லாம் உனக்கு வேண்டாம்டா கண்ணு.

போங்கப்பா. அவுரு அந்த முடியலங்காரத்தில எவ்வளவு அழகா இருக்காரு. உங்களுக்கு ரசனையே இல்லப்பா.

எழுதியவர் : மலர் (13-Sep-18, 4:02 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 89

சிறந்த நகைச்சுவைகள்

மேலே