ஆகாசு ஈகாசு ஊகாசு

ஏன்டா தம்பி, நீ ஊருக்குப் புதுசு போல இருக்குது? எங்கிருந்து வந்த? யார் வீட்டுக்கு வந்த?
நான் ஊருக்குப் புதுசுதான் தாத்தா. மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். உங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற வீட்டுத் தாத்தாவோட பேரன் நாந்தான் தாத்தா.

அடடே. நீ நல்லமுத்தோட கொள்ளுப்பேரனா?

ஆமாங்க தாத்தா.

உங் கூட வந்த அந்த.ரண்டு பசங்களும் யாரு?

ரண்டு பேரும் எந் தம்பிங்க தாத்தா.

உம் பேரு என்னடா கண்ணு?

எம் பேரு ஆகாஷ். எந் தம்பிங்க பேரு......

உம் பேரு ஆகாசு. அப்பா உந் தம்பிங்க பேரு ஈகாசு, ஊகாசா?

இல்லீங்க தாத்தா. கோடீஸ்வரங்க பேரா வைக்கணும் ஆசைப்பட்டு என்னோட அம்மா மூத்த தம்பிக்கு நீரவ் லோடின்னும் இளைய தம்பிக்கு மல்யாகர்னும் பேரு வச்சுட்டாங்க தாத்தா.

நல்ல பேருங்கடா. ஆகாசு, நீராவி, மல்லாயாக்கர்ரு.

????????????

எழுதியவர் : மலர் (13-Sep-18, 7:50 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 65

மேலே