டாக்டர் தீன தயாளு

டாக்டர் தீனதயாளன் கிளினிக்
எலும்பு முறிவு சிகிச்சை
காவலூர்

(மாட்டு வண்டியிலே ஒருவர் ஒரு பதினைந்து வயது சிறுவனை
அழைத்து வந்திருக்கிறார்; பையனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ
அடி, யாரோ ரோட்டுல போற பயன் மீது ஸ்கூட்டர் மோதிவிட்டு
போய்ட்டபோல; கால் போற போறான்னு வீங்கி இருக்கு, கொஞ்சம்
ரத்தம் வேற கசிய, ஒரே அழுகையில் சிறுவன்......)

வண்டிக்காரர் : ஐயா, டாக்டர் ஐயா, என் பய்யன் மேல எவனோ
வண்டில இடிச்சுப்புட்டு ஓடிட்டாங்க ..... முட்டிக்கு கீழ
அடிங்க, எலும்பு முறிவோ தெரியலைங்க... ரொம்ப
அலுவரானுங்க, கொஞ்சம் தயவிட்டு , சீக்கிரம்
பாத்து கட்டுப்போடுங்க.... இவன் படிக்கிற புள்ளைங்க
என் ஒரே பயல் ... தயவிட்டு சீக்கிரம் பாருங்க ஐயா

டாக்டர் : சரி, சரி, புலம்பாத .............. வர்றேன் .........

ஓ, முனியாண்டி நீயா, ஆமாம், இங்க கூட்டிட்டு
வந்திருக்க....... இங்க இவனுக்கு சிகிச்சை செய்ய
குறைஞ்ச பட்சம் ஆயிரம் ரூபா செலவாகும்.....
காசு வெச்சிருக்கியா............ சொல்லு..... தடவை வேஸ்ட்
பண்ணாத, அடுத்த பேஷண்ட் காத்திட்டு இருக்காரு ...

வண்டிக்காரன் : ஐயா ஒங்களுக்கு தெரியும் எண்ணப்பத்தி...வண்டி
ல சாமான் ஏத்தி வர பணத்துல புளப்புங்க.....இம்மாம்
பணத்துக்கு நான் எங்க போவேனுங்க........ இதோ கைல
இன்றைய வருவா இருநூறு வெச்சிருக்கேங்க......
நீங்க பெரிய மனிதர் ஊருக்கு...பெரிய டாக்டருங்க
கொஞ்சம் தயா காட்டுங்க............

டாக்டர் : இதை பாரு முனியாண்டி...... அந்த பண்ணுத்துக்கு இங்க
சிகிச்சை இல்லை....... பஞ்சாயத் தர்ம ஆஸ்பத்திரிக்கு போ
சிகிச்சைக்கு..... காலம் தாழ்த்தாத.........
(காம்பௌண்டர், அடுத்த பேஷண்ட் கூப்பிடு).......தன
:வண்டிக்காரர் ரூமுக்கு போய்விடுகிறார்...... பாவம் vandikaar
இவரு டாக்டர்..... தீனதயாளுனு பேர்.... தயை இல்லையே

அட கடவுளே ......அங்க ரோட்டுல பாவி அடிச்சிட்டு
ஓடிட்டான்......... போலீஸ் ............ போ, போ, முதல்ல
ஆஸ்பத்திரி கூட்டிட்டு பொண்ட்டாரு....
இங்க இப்படி.............. இரக்கமில்ல டாக்டருக்கு .......
என்ன செய்யட்டும் ......அலுத்துகிட்டே பையன
தர்ம ஹொஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறார்.................

டாக்டர் தீனதயாளன்... இவருக்கோ தாயை இல்லை
இந்த ஊர் காவலூர், இங்கு காவல் காரருக்கும்(போலீஸ்)
இரக்கமில்லை............ பாட்டாளிங்க என்னமாரி இருப்பவங்க
உதவி தேட எங்க போக.... கடவுளே.....
எப்படியோ என் பையனுக்கு ஓர் வழி காட்டு..............
(புலம்பிகிட்டே போனார் வண்டிக்காரர்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Sep-18, 8:33 am)
பார்வை : 57

சிறந்த நகைச்சுவைகள்

மேலே