கடவுள் இருந்தால்

காலையில்
எழுந்த உடன்
கோயில் பிரகாரத்தில்
அருள் வேண்டி
ஆயிரம் பக்தர்கள்
இருப்பதோ
இரு காது இரு கண்கள்
சிலையாக இருந்ததினால்
நிலையாக
ஒரே இடத்தில்
இல்லையேல் ?
அத்தனை பேரும்
மொத்தமாக கேட்டால்
சத்தத்தில்
என்னதான் விழும்
காதில்
கண்களில்
பார்த்தாகி விட்டது
செல்லுங்கள்
அவரவர்க்கு உரிய நேரத்தில்
அருள் புரிகிறேன்
இப்போது நிம்மதியாக...

கடவுள் இருந்தால்...!!!

எழுதியவர் : த பசுபதி (14-Sep-18, 11:22 am)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 153

மேலே