மாமா பையனைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்

இங்க வாடா சந்தோசு. நல்ல வேலையில இருக்கிற. வயசு இருபத்தியேழு. பொண்ணுப் பாக்கணும். நாளைக்கு ஆத்தூருக்குப் போலாம். காலைல அஞ்சு மணிக்குத் தயாரா இரு.

என்னப்பா திடீர்னு இப்பிடிச் சொல்லறீங்க?

ஏன்டா பெத்தவங்க உனக்கு செய்யவேண்டிய கடமைடா. ஆத்தூர் பொண்ணு புகைப்படத்தைப் பாருடா. ரொம்ப வசதியான குடும்பம்.

அப்பா நான் ஏற்கனவே யாரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு முடிவு பண்ணீட்டேன். ஆண்டவனே வந்து சொன்னாலும் என் முடிவை மாத்த முடியாதுப்பா.

என்னடா சொல்லற. யாராவது பொண்ணை விரும்புறயா?

பொண்ண இல்ல. பையனை.

பையனையா? நீ என்னடா பொண்ணா?

நீங்க இன்னும் போன நூற்றாண்டிலேயே இருக்கிறீங்க. மாமா பையன் என்னவிட அஞ்சு வயசு சின்னவன். ரொம்ப அழகான பையன். நானும் அவனும் ஒருத்தர ஒருத்தரு விரும்பறோம்.

உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருக்கு?

பைத்தியம் இல்லப்பா. சட்டம் தெரிஞ்சவன். ஒரு ஆண் தான் விரும்பற ஒரு ஆணையும் ஒரு பெண் தான் விரும்பற ஒரு பெண்ணையும் திருமணம் செய்யத் தடை இல்லைன்னு சட்டமே சொல்லுது.

ஏன்டா மகனே, நானும் உன் அம்மாவும் ஒரு பேரன் பேத்தியப் பாக்க ஆசைப்படறது தப்பா?

நாங்க ஒரு ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் சட்டப்படி தத்து எடுத்துக்குவோம். அவுங்களக் கொஞ்சுங்க.

எல்லாம் நாங்க செஞ்ச பாவம்டா. இப்பிடி ஒரு பையனைப் பெத்ததுக்குப் பதிலா ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து வளத்திருக்கலாம்.

அந்தப் பொண்ணும் என்ன மாதிரி கல்யாணம் பண்ண முடிவெடுத்தா என்ன செய்வீங்கப்பா?

கலிகாலம்டா. கலி முத்திப்போச்சு.

எழுதியவர் : மலர் (14-Sep-18, 9:35 pm)
பார்வை : 141

மேலே