இரும்பு மனிதன் -ஷெரிப்

பிச்சைக்காரர் : அய்யா.... காலையில இருந்து ஒன்னுமே சாப்பிடலைங்கய்யா.... சாப்பிட ஏதாவது இருந்தா தருமம் போடுங்க சாமி.....

நம்மாளு மனைவி : என்னங்க....என்னங்க.... அந்த லெமன் சாதம் மிச்சம் இருந்துச்சி, அத அந்தாளுக்கு குடுத்துருங்க......

நம்மாளு : இந்தாய்யா....லெமன் சாதம்.....

பிச்சைக்காரர் : சாமி.... லெமன்சாதம் சிகப்பு கலர்ல இருக்கே.... உங்க பொண்டாட்டி சமைச்சதா சாமி..?

நம்மாளு : ஆமா.....!

பிச்சைக்காரர் : வேணாம் சாமி...!

நம்மாளு : ஏன்யா...ஏன் வேணாங்கிற..?

பிச்சைக்காரர் : இப்படித்தான் போன தடவ வந்தப்போ... உங்க பொண்டாட்டி புதுசா சமைச்சதா சொல்லி புளியோதரை குடுத்தீக சாமி... அத சாப்டுட்டு என் பொண்டாட்டி வாதம் வந்து படுத்தவதான்... இன்னும் எந்திரிக்கல சாமி... வேணாஞ் சாமி..!

நம்மாளு : யோவ்...என்னய்யா நீ... என்னைய பாத்தியா...இத சாப்பிட்டுத்தான் தெம்பா இருக்கேன்...!

பிச்சைக்காரர் : சாமி.. நீ சாதாரண மனுசனே இல்லை சாமி...நீ ஒரு இரும்பு மனிதன் சாமி...அதுலயும் 2.0 சாமி....!!!! ஆளவிடு சாமி...!!

எழுதியவர் : ஷெரிப் (14-Sep-18, 11:06 pm)
Tanglish : irumbu manithan
பார்வை : 119

சிறந்த நகைச்சுவைகள்

மேலே