அர்த்தமற்று போனதடி
இரவை வாசல் திறந்து வரவேற்க்கும் மாலை வேளை!
மனதை இதமாக்க மலைகளை தீண்டி வரும் தென்றல் காற்று!
அந்தி வேளையில் அழகாய் எட்டி பார்க்கும் வெண்ணிலா!
ஒளியை சிந்திக் கொண்டு மெதுவாய் கண்சிமிட்டும் விண்மீன்கள்!
என அனைத்தும் அர்த்தமற்று போகும்!
அன்பே!
உன் ஒற்றை இதழோர புன்னகையில்;