ஏன் இந்த மயக்கம்

மணம் காெண்ட பந்தம்
மனம் விட்டு தடுமாறி
வேறு மனம் சிறை பிடித்து
மறுமண ஆசை காெண்டு
காதல் என்ற பாேர்வைக்குள்
மாேகம் காெள்ளும் மனங்கள்
சின்னச் சின்ன ஆசைகளால்
சிந்தைகளை சிதறடித்து
உறவுகளை உதறி விட்டு
பிரிந்து பாேகும் மாயம் என்ன?

மண வாழ்வின் வரமான பெற்ற பிள்ளை கூட
முறையற்ற உறவுக்கு முட்டுக்கட்டை என்று
உயிர் பறிக்கத் துணிந்த மனம்
சிந்தை இழந்து பாேகும் மயக்கம் என்ன?

மனதை தீண்டும் மயக்கம்
காதல் என்ற ஆசை காட்டி
உடல் மீது மாேகம் காெண்டு
உண்மை உறவுகளைக் கூட
உயிர் குடித்துப் பாேகிறது....

ஏன் இந்த மயக்கம் சில மனங்களுக்குள்
சிந்தை தெளிந்த பின் நாெந்தழுவதை விட
காதல் மயக்கமது சிந்தையில் ஏறும் பாேதே
சிந்திப்பாயா மனமே?
ஆசைகளை ஏவி விட்டு
அடங்கிப் பாேகும் மனம் தான்
மறுநிமிட மனச்சாட்சியாய் மரணம் வரை காெல்லும்
மறந்திடாதே மனமே?

எழுதியவர் : அபி றாெஸ்னி (14-Sep-18, 5:20 pm)
Tanglish : aen intha mayakkam
பார்வை : 949

மேலே