கங்காருவை போல

ஆசைகள் ஆயிரம் உண்டு...!!!
எனினும் என் முதல் ஆசை
சொல்கிறேன்
கேளடி என் ஆருயிர் தோழியே.....!!!

அகவை நூறு நீ
தொட்டு வாழ........
உனக்கு முன் மரணத்தை...
நான் தொட்டு விட வேண்டுமடி.....

சிவலோகம் சென்று
சிவனிடம் வரம் கேட்பேன்...!!
மீண்டும் ஓர் பிறவியில்...!
தாயென நானும்......
உன்னை என் கருவில்
சுமந்திட வேண்டுமடி.....!!

தளிர் நடையிட்டு
நீ நடந்திட்ட போதிலும்...!!
பெதும்பை என நீ
வளர்ந்திட்ட போதிலும்...!!
கங்காருவை போல உன்னை
சுமந்து கொண்டு ...
உலகை வளம் வர
ஆசையடி என்
தோழியே....!!

ஈடு இணையற்ற
பொக்கிஷம் நீ
எனக்கு...!!

ஆயிரத்தில் ஓர்
ஆசையல்ல
ஆயிரம் ஆசைகளுமே...
நீயே என் சகியே.....

எழுதியவர் : லீலா (15-Sep-18, 10:06 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 239

மேலே