நட்பு

நட்பு

" நட்பு "
என எழுதியதும்
என் நினைவுப் பூங்காவில்
பல கதைகளும் தோரணையிட்டது ..!

குட்டிச் சுவற்றில் கும்மாளம்...
வெட்டிப் பேச்சுகள் ஏராளம்...
பாசப் பிணைப்போ தாராளம்!!

சொல்லியும் மாளா நினைவுகளுக்கு
சொற்களை தேடியே நானும் ...?

கூட்டாஞ் சோறு பல ஆக்கி
கூடிய கூட்டங்கள் எவ்வளவு ..?

நீயாய் நானாய் இருந்தோமே..
நட்பினால் நாமாய் திரிந்தோமே!

சாதி மத சாக்கடை அகற்றி
சமத்துவ பூக்கடை வைத்தோமே...

அறியா வயதில் ஆயிரம் அனுபவம்
அறிஞனும் ஆனேன் நட்பாலே...

நித்தமும் நினைவுகள் நித்திரை கொல்லுது
இனி எஞ்சிய நினைவிலும் நீதானே...

சூழ்நிலைகள் பல சூழ்ந்த போதும்
சுயநலமில்லா சுயரூபமே!

முகமூடி யணியா முதல் உறவே
மரணமும் ஜனனமாய் உன்னாலே ...

வறுமையில் துணைநின்று...
தோல்வியில் தோள்கொடுத்து ..
நம்பிக்கையினால் நகர்த்திச் சென்றாய்...!

பட்ட காயங்கள் பலவாகும்
நீ இட்ட மருந்துகளே பலமாகும்..!

வழி தவறி நடக்கையில் தடுப்பானாய்...
மொழி பிறளுகையில் பெயர்ப்பானாய்...

துணிச்சல் கொண்டு நான் நடக்க
துணையாய் உந்தன் உயிர் கொடுத்(தாய்)..!!

காதல்
திருமணம்
குழந்தை
என காலத்தின் கணக்குகள் நகர்ந்தாலும்
நட்பு என்னும் ஓருறவில் நடப்புக்கணக்காய் தொடர்வோமே ...!!!!!!!!!

எழுதியவர் : குணா (14-Sep-18, 10:33 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
Tanglish : natpu
பார்வை : 1022

மேலே