கைபேசி

கைபேசி...

  ஒரு குழந்தைப்போல்
என் கையில் நீ,
  தவறி விழுவாயோ என்று
தடுமாறுகிறேன் நான்.
காலை விடியலும் உன்னால்,
இரவு நீள்வதும் உன்னால்,
உன் வலைப்பின்னல் வேகத்தால்
குறைகிறது தூரம்.
என் கேள்விகள் எல்லாம் கூகிள்
தேடலில்,
பதில்கள் குவிகிறது
உன் முகம் என்னும் திரையில்.
  ஒரு பொழுதும் நீ பேசியதில்லை,
 உன்னுடன் பேசாத நாட்கள்
இல்லை.
  என் தலையணை அருகில் 
  தவமிருக்கும் கைபேசி!!!

                                          -நரேன்

எழுதியவர் : நரேன் (15-Sep-18, 3:27 pm)
சேர்த்தது : நரேன்
Tanglish : kaipesi
பார்வை : 189

மேலே