நரேன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நரேன் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 15-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 13 |
நம்பிக்கை, உந்துசத்தி, விடாமுயற்சி.
இறைவன்…
அவன் மதிக்கத்தக்க மனிதனாய் வாழ்ந்தவன்,
மனதை வெல்லும் யுத்தி கற்றவன்,
மற்றோர் பயன்பெற,
நல்கருத்துகள் பல போதித்தவன்,
பயன் அடைந்தோமா??
அறிவு என்னும் வாள் கொண்டு
அறுவடை செய்யாமல்,
மதம் என்னும் பூமியில் வறண்டு கிடக்கிறோம்.
-நரேன்
காணல் நீராய்
உன் காதல்,
அருகில் வருகிறேன்
விலகிச்செல்கிறாய்,
ஒருதலை ராகம் இது,
இதயத்தின் தாளம் இது,
நீ உணராத பாடல் இது,
எப்போதும்,
நீ உணராத பாடல் இது.
-நரேன்
நீயும்... நானும்...
கடல் அலை போல் நீ
கடற்கரையாய் நான்,
கரைய நினைக்கிறேன் உன்னுள்,
நீ கடந்து போகிறாய் என்னுள்.
உன் பொய்யான சீற்றம், அது ஊடல்,
உன் மெல்லிய தீண்டல்,
அதுவோ கூடல்.
எப்பொழுதும் முத்தம் இடுகிறாய்,
இடையிராத சத்தம் செய்கிறாய்,
முத்தத்தின் சுவடை துடைக்கவோ,
முப்பொழுதும் என்னை தழுவிச்செல்கிறாய்...
-நரேன்
கைபேசி...
ஒரு குழந்தைப்போல்
என் கையில் நீ,
தவறி விழுவாயோ என்று
தடுமாறுகிறேன் நான்.
காலை விடியலும் உன்னால்,
இரவு நீள்வதும் உன்னால்,
உன் வலைப்பின்னல் வேகத்தால்
குறைகிறது தூரம்.
என் கேள்விகள் எல்லாம் கூகிள்
தேடலில்,
பதில்கள் குவிகிறது
உன் முகம் என்னும் திரையில்.
ஒரு பொழுதும் நீ பேசியதில்லை,
உன்னுடன் பேசாத நாட்கள்
இல்லை.
என் தலையணை அருகில்
தவமிருக்கும் கைபேசி!!!
-நரேன்
எட்டுவழிச் சாலையாம்
ஏறுமுகத் திட்டமாம்
ஏழைபாழை நிலம் பறிக்க
ஏகபோக ஆதரவாம்
சேலமிருந்து சென்னைபோக
ரெண்டுமணி சீக்கிரமாம்
சீக்கிரமா போகவேண்டி
யாருக்கென்ன அவசரமாம்
ஒஞ்சொந்தம் வளங்கொழிக்க
எம்மக்க நிலம்பறிக்க
திட்டமொன்னு போடுறியே
தன்னமறந்து ஆடுறியே
கானிநிலம் காரைவீடு
கண்டதெல்லாம் வேணுமாம்
யாரிருக்கா இதகேக்க
பாவிமக்க வலிபோக்க
நிலம்பிடுங்கும் வழிப்பறிய
வளர்ச்சிசெய்யும் வன்முறைய
ஊருசேந்து தடுக்குது
அரசு அதையும் ஒடுக்குது
வாழையடி வாழையா
வாழ்ந்துவந்த பூமிஇது
இதப்பறிக்கும் பாவிகள
தட்டிகேக்கும் சாமிஎது
ஏழேழு தலைமொறையா
உழவுதான எங்கவழி
அதையும்இப்ப அழிச்சுபுட்டு
யாருகேட்டா எட்டுவழி ?
காலையில் கடும் பனி,
உறைந்து போன விரல்கள்,
வாகனத்தில் நான்,
சாலை ஒரம் நீ,
கண்ணாடி குவளைக்குள் வலைந்தாடும்
உன்னை என் கைகளில் ஏந்தி,
இதழ் கொண்டு சுவைக்கையில்
கடும் குளிரும் காணாமல் போகுமோ??
தேநீரே...
-நரேன்.
தீராத தேடல்கள்.
விடை தெரியா கேள்விகள்.
அந்தம் எதுவென்று அறியாத பயணமே
வாழ்க்கை.
-நரேன்.
செந்தமிழில் சந்தங்கள் இயற்றி
தமிழ் சங்கத்தில் அரங்கேற்றி,
கவிஞர் பெருமக்கள் பாட
செவி குளிர
கேட்ட, என் தமிழ் நாட்டில்..
இன்று தமிழுக்கே தமிழாக்கம்
செய்துகொண்டு இருக்கிறோம்.
-நரேன்.