வருகவே நீ வருகவே

வருகவே நீ வருகவே
நான் மருகவே நான் மருகவே
எதுவும் சாராமல் நான் உன்னை சார்ந்தவள் ஆனேனே!
அது ஏனோ ?
சுற்றியும் முற்றியும் நான் கண்டுவிட்டேன்
காணாத உன் முகம் என்னை வாட்டுகின்றதே !
என் இருதயம் அல்லாது உன் இருதயம் எனதாகிப்போனதே
என் உள்ளம் கொண்டவனே
உன் உள்ளம் கொண்டவள் நான் தானே
உன்னைக் கண்டேனே!
என்னுயிரும் உனதாகிப் போகவே
நானும் என்னிடம் இல்லையே
என்னவனே! என்னவனே !
நீ வருகவே நான் மருகவே
நீ துளிர்கவே நான் கண்மூடவே
நீ சிரிக்கவே நான் மாயமாய் போகவே
எல்லாம் நீயாகிப்போனாயே
வருகவே நீ வருகவே
நான் மருகவே .........

எழுதியவர் : பிரகதி (15-Sep-18, 8:21 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 142

மேலே