அமைதிகடல்
ஆவேசமில்லா அலை
கடலென காந்தி..
உம் கரை மணல்
காதலில் சுதந்தரம்
வேங்கையென துள்ளாது
வெற்றிபெரும் போராளி
கதரெனும் உடையினில்
கவுரவம் தந்தாய்
கண்ணாடி பார்வையில்
கள்வைனை வென்றாய்
உம் கொள்கைக்கு
கோபங்கள் வந்ததில்லை
உம் புன்னகைக்கு
பயங்கள் சேர்ந்ததில்லை
வளைந்திடும் வயதிலும்
வெள்ளையை வென்றாய்
பாரத பசியினை
பழம்நிறைத்து சென்றாய்..
கோட்சேவின் குண்டுக்கு
உன்உடல் மட்டும் மாய்ந்ததுவே
உயிர் இன்றும் வாழுந்ததுவே..
அமைதியும் அன்பும்
தோற்பதில்லை -வெற்றியின்
சூழ்ச்சிக்கு மாய்ந்ததில்லை…