என்னவன் வந்துவிட்டான்
அவனுக்காக காத்திருந்த காலங்களில் அவளுக்கான தேடல் எதுவும் இல்லை…இன்றோ நாளையோ என்னவன் வருவான் என்று விழி மீது விழி வைத்து காத்திருந்தாள் நமது கதாநாயகி வான்மதி…..கணவன் இராணுவத்தில் பணி புரிவதால் வருடத்துக்கு ஒரு முறை தான் வருவான் தற்போது போர் நேரம் என்னவன் நாட்டை காப்பாற்றுகிறான் என்ற கர்வமும் அவன் நல்லபடியாக திரும்ப வேண்டும் என்ற ஏக்கமும் வாட்டி வதைத்தது….
நாட்கள் உருண்டோடின…….மாடியில் துணி காயவைத்து கொண்டிருந்தாள் பக்கத்து வீட்டு வனஜா அவளிடம் பேசிக்கொண்டு இருந்தாள் திடீரென ஆரவாரம் எட்டி பார்த்தாள் நம் வான்மதி மாலையும் கழுத்துமாக நண்பர்கள் தன் கணவனை அழைத்து கொண்டு வருவதை கண்டு நெகிழ்ந்தாள்……
போரில் வெற்றியை சந்தித்த சந்தோஷம் ஒரு பக்கம் மனைவியை காணும் சந்தோஷம் ஒரு பக்கம்……ஓடி சென்று மாமா என்று கட்டி அனைத்தாள்….அவனின் இதயத்துடிப்பு மெல்ல கேட்க……அதனை ரசித்த படி தன் முகத்தை பதித்தாள்…
மாமா….வந்துட்டிங்களா????
ம்ம்ம்…..வெற்றி யோட வந்துருக்கன்….இதோ என் விருது
ஹாஹா சந்தோஷம் தாங்க முடியல…..
இன்னொரு சந்தோஷமான செய்தி…….உனக்கு
என்னது மாமா…???☺️
திரும்பி போகுறப்போ உன்னையும் என் கூட கூட்டிட்டு போறன்…..அங்க எனக்கு குடியிருப்பு தந்துருக்காங்க…
நிஜமா??☺️
ம்ம்ம்……என்று என்னவளை பார்த்து தலையசித்தான்…அவனை ஏறிட்டு பார்த்த அவள் மீண்டும் இருக கட்டி அனைத்தாள்.